இலங்கை மீதான கண்காணிப்பை ஆரம்பித்துள்ள ஐ.நா - sonakar.com

Post Top Ad

Wednesday 24 March 2021

இலங்கை மீதான கண்காணிப்பை ஆரம்பித்துள்ள ஐ.நா

 


மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கண்காணிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள், கட்டாய ஜனாஸா எரிப்பு, சமய அடக்குமுறைகள் என பல்வேறு விடயங்களின் பின்னணியில் இப்பிரேரணை முன் வைக்கப்பட்டிருந்தது. ஈற்றில் நேற்றைய தினம் 21:11 என்ற வாக்கு அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.


இத்தீர்மானத்தினால் உடனடி எதிர் விளைவுகள் இல்லாவிடினும் சர்வதேச மட்டத்தில் நீண்ட கால இழப்புகள் மற்றும் வர்த்தக சிக்கல்களை இலங்கை எதிர்நோக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

No comments:

Post a Comment