பேக்கரி தயாரிப்புகளின் விலைகளை உயர்த்த முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 March 2021

பேக்கரி தயாரிப்புகளின் விலைகளை உயர்த்த முஸ்தீபு

 


பண்டிகைக் காலப்பகுதியில் பேக்கரி தயாரிப்புகளின் விலைகளை உயர்த்த வேண்டி நேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்.


தற்போதைய வரி மற்றும் பொருட்களின் விலைகளின் பின்னணியிலான மீளாய்வில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இறக்குமதி கட்டுப்பாடுகள், மேலதிக வரிச்சுமைகளுடன் விலையுயர்வு அத்தியாவசியப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment