விமல் வீரவன்சவுக்கு எதிராக ரிசாத் முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Wednesday 10 March 2021

விமல் வீரவன்சவுக்கு எதிராக ரிசாத் முறைப்பாடு

 


ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் தொடர்ச்சியாக தன் மீது பொய்யான அவதூறு வெளியிட்டு வரும் விமல் வீரவன்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன்.


தொடர்ச்சியாக அவர் செய்து வந்த பொய்ப் பிரச்சாரங்கள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் விமல் வீரவன்சவுக்கு எதிராக விசாரணை நடாத்தி நடவடிக்கையெடுக்குமாறு எழுத்து மூலம் முறையிட்டுள்ளதாக ரிசாத் தெரிவிக்கிறார்.


தனது வாழ்க்கையில் தான் சஹ்ரானை எப்போதும் சந்தித்ததில்லையெனவும் விமல் வீரவன்ச தொடர்ந்தும் தனக்கெதிராக போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் ரிசாத் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment