எங்கள் குடும்பத்தை பிரிக்க முடியாது: ஜனாதிபதி விசனம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 13 March 2021

எங்கள் குடும்பத்தை பிரிக்க முடியாது: ஜனாதிபதி விசனம்!

 


எங்கள் குடும்பத்துக்குள் ஒருவருக்கு எதிராக இன்னொருவரைத் தூண்டி விடும் வகையிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் அது சாத்தியப்படப் போவதில்லையென தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.


கோட்டா - பசில் அதிகார போட்டியொன்றை உருவாக்கும் வகையிலான பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை, தேர்தலை முன்னிட்டு அரசியல் நாடகம் இடம்பெறுவதாகவும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.


பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment