புலஸ்தினி உயிரோடிருப்பது 'கட்டுக் கதை': கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Tuesday 9 March 2021

புலஸ்தினி உயிரோடிருப்பது 'கட்டுக் கதை': கம்மன்பில

 


ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுள் ஒருவரின் மனைவியென கருதப்படும் சாரா என அறியப்படும் புலஸ்தினி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவது வெறும் கட்டுக் கதையே என்கிறார் உதய கம்மன்பில.


அது உண்மையாக இருந்தால் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து புலஸ்தினியை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


மத்திய வங்கி பிணை முறி ஊழலில் தொடர்புபட்ட முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனை இன்னும் நாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் இருப்பதும், தாக்குதல்கள் தொடர்பிலான அனைத்து துல்லியமான தகவல்களும் இந்திய உளவுப் பிரிவுக்குத் தெரிவதற்குக் காரணம் புலஸ்தினி என்றே நம்பப்படுகின்றமையும்  குறிப்பிடத்தக்கன.

No comments:

Post a Comment