டாம் வீதி சடலம்: பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை! - sonakar.com

Post Top Ad

Wednesday 3 March 2021

டாம் வீதி சடலம்: பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை!

 நேற்று முன் தினம் மத்திய கொழும்பு, டாம் வீதி பகுதியில் கைவிடப்பட்டிருந்த பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தலையில்லாத நிலையில் மீட்கப்பட்ட குறித்த சடலம், குருவிட்டயைச் சேர்ந்த 30 வயது பெண்ணொருவருடையது என அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில், அப்பெண்ணை கொலை செய்து தலையில்லாத சடலத்தை பயணப் பையில் கொண்டு வந்து டாம் வீதியில் கைவிட்டுச் சென்றதாகக் கருதப்படும் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இருவரும் பெப்ரவரி 28ம் திகதி விடுதியொன்றுக்குள் சென்றிருந்த அதேவேளை, மறு தினம் குறித்த ஆண் நபர் பயணப் பையுடன் வெளியேறும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கொலை தொடர்பிலான விபரங்களைக் கண்டறிந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment