ஈஸ்டர் அறிக்கை: நாடாளுமன்றில் மேலும் விவாதிக்க ஏற்பாடு - sonakar.com

Post Top Ad

Wednesday 17 March 2021

ஈஸ்டர் அறிக்கை: நாடாளுமன்றில் மேலும் விவாதிக்க ஏற்பாடு

 


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்க மேலும் இரு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில், எதிர்வரும் 25 மற்றும் 26ம் திகதிகளிலும் இவ்விவகாரம் நாடாளுமன்றில் விவாதிக்ப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


ஆணைக்குழுவின் அறிக்கை எவ்விதத்திலும் முழுமை பெறவில்லையென பல கோணங்களில் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment