சனிக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கலில் மாற்றம் - sonakar.com

Post Top Ad

Thursday, 11 March 2021

சனிக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கலில் மாற்றம்

 


எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசியை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமையுடன் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் இந்த வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் உயிரிழந்துள்ள நிலையில் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ரஷ்ய தயாரிப்பை கொள்வனவு செய்வதற்கான விலை நிர்ணயம் தொடர்பிலும் பேச்சுவார்த்தை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment