அசாத் சாலியிடம் விசாரணை நடாத்த உத்தரவு - sonakar.com

Post Top Ad

Sunday 14 March 2021

அசாத் சாலியிடம் விசாரணை நடாத்த உத்தரவு

 


தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் ஆளுனருமான அசாத் சாலியின் அண்மைய பேச்சு தொடர்பில் அவரிடம்  குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


எனினும், அமைச்சர் சரத் வீரசேகர கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, நேற்றைய தினம் கறுவாத்தோட்டம் பொலிசுக்கு நேரடியாகச் சென்ற அசாத் சாலி, தன்னை விசாரிப்பதாக இருந்தால் எந்நேரமும் அழைக்கலாம் என தனது விபரங்களைத் தெரிவித்து வந்ததாக சோனகர். கொம்மிடம் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், கைதுக்கு முன்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரை விசாரிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், முஸ்லிம் தனியார் சட்டத்தை அரசு நீக்கினாலும் முஸ்லிம்கள் அதனைப் பின்பற்றுவதை கைவிடப் போவதில்லையென்பதையே தான் தெரிவித்திருந்ததாகவும் அதனை வேறு வகையில் திரிபு படுத்த முயற்சி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


முஸ்லிம் தனியார் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கான முயற்சிகளும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment