பரிஸ் நகரிலும் கருப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு - sonakar.com

Post Top Ad

Monday 8 March 2021

பரிஸ் நகரிலும் கருப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு

 


நேற்றைய தினம் இலங்கையில் கருப்பு ஞாயிறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரான்ஸ் தலை நகர் பரிசிலும் அங்கு வாழும் இலங்கையர்கள் கூடி கருப்பு ஞாயிறு தின அனுஷ்டிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


ஸ்ரீலங்கா எக்கமுதுவ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் அனைத்து சமூகங்களைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையும் சூத்திரதாரிகளை வெளிக்கொணரத் தவறியுள்ள நிலையில் அதற்கான நீதியை நிலை நாட்ட வலியுறுத்தி கத்தோலிக்க ஆயர்கள் கருப்பு ஞாயிறு அனுஷ்டிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment