பல PCR இயந்திரங்கள் பழுது: முடிவுகளைப் பெறுவதில் தாமதம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 13 February 2021

பல PCR இயந்திரங்கள் பழுது: முடிவுகளைப் பெறுவதில் தாமதம்!

 


அநுராதபுர உட்பட பல்வேறு இடங்களில் பி.சி.ஆர் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதன் பின்னணியில் கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் தாமதமாகி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார் இராணுவ தளபதி.


அண்மைய தினங்களில் தினசரி 900க்கும் அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்படுவது தொடர்பிலும் விளக்கமளித்துள்ள அவர், மஹியங்கன பகுதியில் இரு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தொற்றே அதற்கான காரணம் என தெரிவித்துள்ளார்.


இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் முடிவுகளைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் எதிர்வரும் சில நாட்களில் சீராகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment