மூன்றாவது நாளாக தொடரும் P2P போராட்டம் - sonakar.com

Post Top Ad

Friday, 5 February 2021

மூன்றாவது நாளாக தொடரும் P2P போராட்டம்

 


வட - கிழக்கு சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் பொது மக்கள் ஆதரவுடன் இடம்பெற்று வரும் சிறுபான்மை சமூகங்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது.


திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவை சென்றடைவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை தொடர்ச்சியாக பல எதிர்ப்புகளையும் சந்தித்து வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.


சில இடங்களில் பொலிசார் தடையுத்தரவுகளைப் பெற்று பேரணி முன்னோக்கி நகர்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை 6ம் திகதி நிறைவுறும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 7ம் திகதி வரை நடவடிக்கைகள் தொடரும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment