ஒரு நாடு - இரு சட்டமா? சாணக்கியன் கேள்வி - sonakar.com

Post Top Ad

Tuesday 23 February 2021

ஒரு நாடு - இரு சட்டமா? சாணக்கியன் கேள்வி

 தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய வெற்றியாளருக்கு வரவேற்பளிக்கும் பேரணியொன்று அஹுங்கல்ல பகுதியில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. எனினும், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியைத் தடுத்து நிறுத்த முயன்ற பொலிசார் இதனைத் தடுக்க முயற்சிக்கவில்லையென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்.


ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் P2P பேரணியின் பின்னணியில் தம்மிடம் வாக்குமூலம் பெற்றது போன்று குறித்த பேரணி தொடர்பிலும் அதே நடவடிக்கை இடம்பெற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெற்றியீட்டிய நபருக்காக இடம்பெற்ற பேரணி தொடர்பிலேயே சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments:

Post a Comment