டுபாய் - கொழும்பு விமான சேவை மீள் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Thursday 18 February 2021

டுபாய் - கொழும்பு விமான சேவை மீள் ஆரம்பம்

 டுபாயிலிருந்து கொழும்புக்கான தமது விமான சேவையை மீள ஆரம்பித்துள்ளது Fly டுபாய். 


இலங்கையில் சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்றைய தினம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது.


இச்சூழ்நிலையில் டுபாயிலிருந்து கொழும்புக்கான குறித்த விமான சேவை 58 பயணிகளுடன் இன்று இலங்கையில் தரையிறங்கி, இங்கிருந்து 166 பேருடன் டுபாய் திரும்பியுள்ளது. வாரம் இரு தடவைகள் தமது கொழும்புக்கான சேவை இடம்பெறும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment