மைத்ரி விவகாரம்: உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும் - sonakar.com

Post Top Ad

Friday 26 February 2021

மைத்ரி விவகாரம்: உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும்

 


ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்குஎ எதிராக நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்கும் என தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.


தற்சமயம், சுதந்திரக் கட்சி - பெரமுன இடையில் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாகவே முடிவைக் காண முடியும் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


இலங்கை அரசியல் யாப்பின் 35வது சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படக்கூடிய விதிவிலக்கு உச்ச நீதிமன்றினால் எவ்வாறு மொழிபெயர்க்கப்படப் போகிறது என்பதைப் பொறுத்தே இதற்கான தீர்வு கிடைக்கும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment