இம்ரானின் உரை இரத்து; இந்தியாவே காரணம்: அசாத் - sonakar.com

Post Top Ad

Friday, 19 February 2021

இம்ரானின் உரை இரத்து; இந்தியாவே காரணம்: அசாத்

 இலங்கையில் இந்திய தலையீட்டைக் குறைக்கவே சீனாவின் வேண்டுகோளுக்கிணங்க, கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தின் மத்தியிலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வருவதற்கும் நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கும் இணங்கியிருந்தார்.


எனினும், தற்போது இந்தியாவின் அழுத்தத்தினால் அவரது நாடாளுமன்ற உரையை அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் மேல் மாகாண ஆளுனரும் தேசிய  ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.


இம்மாதம் 22ம் திகதி இலங்கை வருவதற்கு திட்டமிட்டுள்ள இம்ரான் கான், நாடாளுமன்றிலும் உரையாற்றுவதற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment