ஈஸ்டர் விசாரணை அறிக்கை: ஞானசார கடுங் கோபம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 February 2021

ஈஸ்டர் விசாரணை அறிக்கை: ஞானசார கடுங் கோபம்!

 


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் பொது பல சேனா அமைப்புக்கு எதிரான சில கருத்துக்களும் உள்ளிடப்பட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார் ஞானசார.


2025ம் ஆண்டு ஜனாதிபதி அல்லது பிரதமராகும் கனவோடு இருக்கும் யாரோ ஒருவரின் தலையீட்டிலேயே இவ்வாறு நடந்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.


ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்புதாரிகள் மற்றும் அதன் பின்னணி தொடர்பிலான அறிக்கையில் ஞானசார மற்றும் பொது பல சேனாவின் பெயர்களும் உள்ளிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதன் பின்னணியிலேயே அவர் இவ்வாறு கோபத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment