மஹிந்தவை ஜோக்கராக்காதீர்கள்: மரிக்கார்! - sonakar.com

Post Top Ad

Thursday 11 February 2021

மஹிந்தவை ஜோக்கராக்காதீர்கள்: மரிக்கார்!

 


கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுமா? என்ற தனது தெளிவான கேள்விக்கே பிரதமர் வலிந்து பதிலளித்ததாகவும் தற்போது ஆளுங்கட்சியினர் அவரை ஜோக்கராக்க முனைவதாகவும் தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்.


இம்ரான் கானையும், சர்வதேசத்தையும் திருப்திப்படுத்த நடாத்தப்பட்ட நாடகம் என்கிற சந்தேகம் இருப்பதை மறுக்க முடியாது எனவும் தெரிவிக்கின்ற மரிக்கார், 22ம் திகதி இம்ரான் கான் இலங்கை வருவதற்கு முன்பாக சுற்று நிருபத்தை வெளியிட்டு அரசு பிரதமரின் அறிவித்தலை மதிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


தனது கேள்வி அவசியமற்றது என சபாநாயகர் தவிர்க்க முனைந்த போதும் மஹிந்த ராஜபக்ச அதற்கு வலிந்து பதிலளித்ததன் பின்னணியில் காரணமில்லாமல்  இல்லையெனவும், இருப்பினும் ஒரு நாட்டின் பிரதமரை ஜோக்கராக்குவதை விடுத்து விரைவில் சுற்று நிருபத்தை வெளியிட வேண்டும் எனவும் மரிக்கார் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment