பேசித் தீர்க்கலாம்: விமலுக்கு மஹிந்த அழைப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 12 February 2021

பேசித் தீர்க்கலாம்: விமலுக்கு மஹிந்த அழைப்பு!

 விமல் வீரவன்சவுக்கு பொதுஜன பெரமுனவுடன் இருக்கும் பிரச்சினைகளை தன்னுடன் நேரடியாகப் பேசித் தீர்க்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


அண்மைக்காலமாக பெரமுனவின் வியத்மக அணியோடு கருத்து மோதலில் ஈடுபட்டுள்ள விமல், ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவும் விடாது சிலர் தடுத்து வருவதாகவும் அவருக்கு பெரமுனவின் தலைமைப் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையிலேயே, விமலுக்கு எதிரான கருத்துக்களளை வியத்மகவினர் பரப்பி வருவதுடன், தனது பலத்தைக் காட்ட 12 கட்சித் தலைவர்களை வீட்டுக்கு அழைத்து கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார் விமல் வீரவன்ச. இச்சூழ்நிலையில், எதுவாக இருந்தாலும் தன்னுடன் நேருடன் பேசுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment