ஜனாதிபதி விரைவில் பதவியிழப்பார்: பன்னாலோக தேரர்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 January 2021

ஜனாதிபதி விரைவில் பதவியிழப்பார்: பன்னாலோக தேரர்!

 


ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவைச் சுற்றி முஸ்லிம் அடிப்படைவாதிகள் குடிகொண்டுள்ளதாகவும் விரைவில் அவர் பதவியிழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கிறார் மெடில்லே பன்னாலோக தேரர்.


இவ்வாறு அவரைச் சுற்றியுள்ளவர்களைத் திருப்திப் படுத்துவதற்காகவே ஜனாதிபதியின் தீர்மானங்கள் அமைந்து வருவதாகவும் அது அவருக்கு வாக்களித்த மக்களின் அபிலாசைகளுக்க எதிரானது எனவும் தேரர் மேலும் தெரிவிக்கிறார்.


அண்மையில் ஜனாஸா எரிப்பை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் முன்பாக பன்னாலோக தேரர் தன் பங்காளிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

1 comment:

Suhood MIY said...

இந்நாட்டிற்கு என்றும் தேவை நீதியான நியாயமான சமாதானமிக்க மக்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டையுடைய ஆட்சி முறையாகும். ராஜபக்ஸர்கள் ஆண்டால் என்ன அல்லது சஜித் போன்றோர் ஆட்சி புரிந்தால் என்ன மேற்கண்டவை நிறைவேறும்பொழுது ஆட்சிமுறைமை சீரும் சிறப்புமிக்கதாக விளங்கும். தற்போது சமயப் பாடசாலைகளில் கற்றவரகள் எல்லாம் விஞ்ஞானிகளாகவும் நிபுணர்களாகவும் மாறியுள்ளமைதான் மிகவும் வேதனைக்குரியதாகும். இல்லாதது பொல்லாதது என்பனவற்றை இந்த ஆசாமிகள் கூறுகின்றபோது சிறு பிள்ளைகள்கூட இவரகளை மதிக்காமல் இருக்கும் காலம் வரலாம். மத குருமார்களின் ஆகப் பெரிய பணி மக்கள் மத்தியில் அஹிம்சைசையும் மரியாதைமிக்க குணங்களையும் ஒற்றுமையான வாழ்க்கையினைக் கட்டி எழுப்புவதைப்பற்றித்தான் கற்பிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக இருந்து கொண்டு அவரகள் கொண்டு வரக்கூடிய குருட்டுச் சட்டஙகளுக்கு ஆதரவு தெரிவிப்பது அல்ல. அவரவர் தாம் இருக்கும் இடத'தில் இருந்து கொண்டால் எல்லாம் சுபமாகவே முடியும்.

Post a Comment