களனி, வனவாசல பகுதியில் 27.5 மில்லியன் ரூபா பணம், கைத்துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் வைத்திருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் இவ்வாறு பெருந்தொகை பணம் கையிருப்பில் இருந்தமை சந்தேகத்துக்குரியது எனவும் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கிறார்.
38 வயது நபர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment