நடைமுறை அரசின் போக்கும் செயற்பாடுகளும் தமக்கு அதிருப்தியளிப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
நாட்டின் பொருளாதார சூழ்நிலை மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் சமூக வாழ்வை பெருமளவு பாதித்திருப்பதாக தெரிவிக்கின்ற அவர், அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிப்பதாகவும் அரசு கையாளும் உபாயங்கள் பின் விளைவுகளை உருவாக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலியுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே இவ்வாறு அவர் தெரிவித்திருந்த அதேவேளை கட்டாய ஜனாஸா எரிப்பினை எதிர்த்து அவர் வெளியிட்ட கருத்துக்களுக்கு இதன் போது நன்றி தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தொடர்ந்தும் இவ்விடயத்தில் தனது கவலையை வெளியிட்டதாகவும் அசாத் சாலி சோனகர்.கொம்முக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment