நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ச்சியாக பரிசோதனை - sonakar.com

Post Top Ad

Friday, 15 January 2021

நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ச்சியாக பரிசோதனை

 


நாடாளுமன்ற வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். 


கடந்த திங்கட்கிழமை பரிசோதிக்கப்பட்ட 15 நாடாளுமன் உறுப்பினர்களில் எவருக்கும் தொற்றில்லையென தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இன்றைய தினம் மேலும் 16 நாடாளுமன் உறுப்பினர்கள் மற்றும் 493 ஊழியர்களுக்கு பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.


தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நானாயக்கார மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோர் தொற்றுக்குள்ளாகி தனிமைப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் இணைப்புச் செயலாளருடனும் தொடர்பிலிருந்த பலருக்கு தனிமைப்பட உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment