ஜனாஸா எரிப்பு: வேன்கூவரில் (கனடா) ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Monday, 4 January 2021

ஜனாஸா எரிப்பு: வேன்கூவரில் (கனடா) ஆர்ப்பாட்டம்

 இலங்கையில் தொடரும் கட்டாய ஜனாஸா எரிப்பைக் கண்டித்து கனடா, வேன்கூவர் பெரும்பகுதியில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


உலக சுகாதார நிறுவனம் இந்த விடயத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தெளிவான வழிகாட்டல்களை வழங்கியிருந்தும், ஏனைய நாடுகள் அவற்றை அனுசரித்து அதன்படி இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள அனுமதியளித்திருந்தும், ஆச்சரியப்படத்தக்க வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் அவற்றினை ஏற்க  மறுத்திருப்பதோடு, சர்வதேச அங்கீகாரம் பெற்ற நுண்ணுயிர் துறை சார் நிபுணர்களின் கருத்துகளையும் இலங்கை ஏற்க மறுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு பதாதைகளும் ஏந்தப்பட்டிருந்தன.


- SIRAJNo comments:

Post a Comment