நினைவிடம் இடிப்பு: யாழ். பல்கலை முன் போராட்டம்! - sonakar.com

Post Top Ad

Friday, 8 January 2021

நினைவிடம் இடிப்பு: யாழ். பல்கலை முன் போராட்டம்!

 


இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவுகூறும் வகையில் யாழ். பல்கலையில் நிறுவப்பட்டிருந்த நினைவிடம் பாதுகாப்பு தரப்பினால் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பல்கலை முன் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


குறித்த நினைவகத்தினை நிறுவுவதற்கு 2018ம் ஆண்டிலேயே எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்த போதிலும் அதன் கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்து நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.


எனினும், இன்றைய தினம் இரவு இவ்வாறு திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment