மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு: சந்தேக நபர் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 January 2021

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு: சந்தேக நபர் கைது

 


மாவனல்லை புத்தர் சிலை உடைப்பின் பின்னணியிலான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


மத வழிபாட்டுத்தளங்களில் உள்ள உண்டியல்களில் திருடும் வழக்கமுள்ள, கேகாலை - ஹெட்டிமுல்லயைச் சேர்ந்த 30 வயதான பிரியந்த சம்பத் குமார எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


குறித்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதால் இவ்வாறான திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 28ம் திகதி இரு புத்தர் சிலைகள் மீது கல் வீசப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது (சோனகர்.கொம்).

No comments:

Post a Comment