ஜனாஸா எரிப்பு: விடாப்பிடியாக கேள்வி கேட்ட கஜேந்திரகுமார்! (video) - sonakar.com

Post Top Ad

Thursday, 7 January 2021

ஜனாஸா எரிப்பு: விடாப்பிடியாக கேள்வி கேட்ட கஜேந்திரகுமார்! (video)

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்படும் நடைமுறை தொடரும் என இன்றைய தினம் நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர் பவித்ராவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.


எனினும், டிசம்பர் 24ம் திகதி நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கைக்கு என்னவானது? என சபையில் இன்று கேள்வியெழுப்பியிருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். குறித்த குழுவை முதலில் உப-குழு வென வர்ணித்த பவித்ரா, தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் அக்குழு உத்தியோகப்பற்றற்ற குழுவெனவும் சபையில் அறிவித்திருந்தார்.


இந்நிலையில், சன்ன பெரேராவின் தலைமையிலான முன்னைய குழு டிசம்பர் 28ம் திகதி வழங்கப்பட்ட புதிய ஆலோசனைகளை இன்னும் பரிசீலித்துக் கொண்டிருப்பதாகவும் நிலைமையை சமாளிப்பதற்காக பவித்ரா தெரிவித்திருந்தார். அதன்படி, எப்போது விடை கிடைக்கும் என்பதைத் தெளிவுபடுத்தும்படி தொடர்ந்தும் கஜேந்திரகுமார் வினவிய போதிலம் தினேஷ் குணவர்தன தலையிட்டு 'நீங்கள் விரும்பும் வகையில் கேள்விகளுக்கு விடை கிடைக்காது' என கேள்வி நேரத்தை முறியடித்ததுடன் சபாநாயகரும் அமைச்சர் எப்போதாவது பதில் தருவார் என்ற அறிவிப்பை மேற்கொண்டிருந்தார்.


இந்நிலையில், நாட்டின் தலைசிறந்த நிபுணர்களின் பரிந்துரைகள் பயனற்றுப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வாதப் பிரதிவாதங்களின் காணொளியைக் கீழ்க் காணலாம் (சோனகர்.கொம்):

https://fb.watch/2SKw2Wz4Sb/


No comments:

Post a Comment