சீனாவில் எரிப்பது இனவாதமா? கேட்கிறார் கெஹலிய! - sonakar.com

Post Top Ad

Wednesday 27 January 2021

சீனாவில் எரிப்பது இனவாதமா? கேட்கிறார் கெஹலிய!

 



சீனாவின் ஒரு பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான அனைத்து உடலங்களையும் எரிக்கும் நடைமுறையிருப்பதாகவும் அது இனவாதமில்லையெனும் போது இலங்கையில் மாத்திரம் கட்டாய எரிப்பு எவ்வாறு இனவாதமாகும் என கேள்வியெழுப்பியுள்ளார் கெஹலிய.


நாட்டின் நிலவரத்துக்கேற்ப எரித்தல் - புதைத்தல் ஆகிய இரண்டில் ஒன்றை மேற்கொள்ள  முடியும் என்பதே உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல் எனவும் இலங்கையில் நிபுணர்களின் வழிகாட்டலின் பேரிலேயே எரிப்பு இடம்பெறுவதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தமக்கு நிபுணத்துவமில்லாத விடயத்தில் தலையிடுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


எனினும், இலங்கையில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் என அரசு முன் வைத்த காரணங்களை ஏலவே உள் நாட்டு - வெளிநாட்டு நிபுணர்கள் முற்றாக நிராகரித்துள்ளதுடன் அவை ஆதாரமற்ற கற்பனைகள் என விளக்கமளித்துள்ளனர். டிசம்பர் இறுதியில் அரசாங்கமே இவ்விவகாரத்தை ஆராய நியமித்த 11 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவும் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு பரிந்துரைத்தும் தொடர்ந்தும் கொரோனா உடலங்கள் எரிக்கப்படுகின்றமையும் அதிகமானவை முஸ்லிம்களது ஜனாஸாக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment