ஹர்த்தாலுக்கு முழு ஒத்துழைப்பு: முஸ்லிம் கட்சிகள் அறிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday 10 January 2021

ஹர்த்தாலுக்கு முழு ஒத்துழைப்பு: முஸ்லிம் கட்சிகள் அறிவிப்பு!

 


முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த நினைவுத் தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான எதிர்ப்பை வெளியிடும் வகையில் நாளை திங்கட்கிழமை வட - கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இது சிறுபான்மை சமூகங்களை அடக்கியொடுக்குவதற்கான திட்டமிட்ட செயல் என ஏலவே கடும் கண்டனம் வெளியிட்டுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி மற்றும் சமகி ஜன பல வேகயவின் முஸ்லிம் உறுப்பினர்களும் தமது பூரண ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் சிறுபான்மை சமூகத்தின் ஒன்றிணைந்த நடவடிக்கையாக இது இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். குறித்த கட்சிகள் தமது உத்தியோகபூர் முகநூல் பக்கங்களில் இதற்கான பிரத்யேக பதிவுகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment