இராஜாங்க அமைச்சர் அருந்திகவுக்கு கொரோனா தொற்று - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 January 2021

இராஜாங்க அமைச்சர் அருந்திகவுக்கு கொரோனா தொற்று

 இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோவுக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


கொரோனா தொற்றுக்குள்ளான ஏழாவது நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இணைந்து கொள்கின்ற அதேவேளை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.சி.ஆர் பரிசோதனையைத் தட்டிக் கழித்து வருவதாக சபாநாயகர் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.


தயாசிறி, வாசு மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள அதேவேளை, பவித்ரா - பியல் நிசந்த - வசந்த யாப்பா ஆகியோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment