டயானா கோரிக்கை: பௌத்த துறவிக்கு ஜனாதிபதி 'மன்னிப்பு' - sonakar.com

Post Top Ad

Sunday, 3 January 2021

டயானா கோரிக்கை: பௌத்த துறவிக்கு ஜனாதிபதி 'மன்னிப்பு'

 


2010 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை ஆதரித்திருந்த நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பின்னணியில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த பௌத்த துறவிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.


சமகி ஜன பலவேகய தலைமைத்துவத்தை ஏமாற்றி விட்டு 20ம் திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்த டயானாவின் பரிந்துரையிலேயே மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜாராம விகாரையின் பிரதானியாக இருந்த உவதென்ன சுமன தேரர் விடுவிக்கப்பட்டுள்ளார்.


எனினும், தனது சிறைத்தண்டனைக்கு எதிராக அவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதன் நிபந்தனை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment