செய்ய வந்த வேலை முடிந்து விட்டது: ட்ரம்ப் - sonakar.com

Post Top Ad

Wednesday 20 January 2021

செய்ய வந்த வேலை முடிந்து விட்டது: ட்ரம்ப்தன்னை ஜனாதிபதியாக்கிய மக்கள் தந்த ஆணையை நிறைவேற்றி விட்டே தனது பதவிக் காலத்தை முடித்துக் கொள்வதாக தெரிவிக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.


ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆரம்பித்து, ஜனாதிபதியாக பதவி வகித்த காலம் வரை பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய ட்ரம்ப், புதிய ஜனாதிபதி பைடனின் வெற்றியை இதுவரை முழுமையாக ஏற்றுக் கொள்வில்லை. அதேவேளை, தகுந்த ஆதாரங்கள் எதையும் முன் வைக்காது தேர்தலில் மோசடி நடந்ததாகவும் தெரிவித்து வருகிறார்.


இந்நிலையில், இன்றோடு அவரது பதவிக் காலம் முடிவு வரும் நிலையில், தனது இறுதியுரையை நிகழ்த்தியுள்ள அவர், தாம் செய்ய செய்த வேலையையும் அதற்கு மேலாகவும் செய்து முடித்துள்ளதாக தெரிவிக்கிறார். 


ட்ரம்ப் ஆதரவாளர்கள் அண்மையில் தலை நகரில் வன்முறையில் ஈடுபட்டிருந்ததோடு அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது தடவையாக குற்றச்சாட்டுகளின் பின்னணியிலான விசாரணைக்கு முகங்கொடுக்கும் ஜனாதிபதியாகியுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமிடத்து டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பொது நிர்வாக சேவையில் ஈடுபடுவதற்கு போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும்.


ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்கள் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டுவதாக அவரைத் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment