மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஞ்சன் சூளுரை - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 January 2021

மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஞ்சன் சூளுரை

 


நீதிபதிகள் - சட்டத்தரணிகள் மற்றும் துமிந்த சில்வா குறித்து தெரிவித்த எந்தக் கருத்துக்களையும் தான் வாபஸ் பெறப்போவதில்லையெனவும் மன்னிப்பு கேட்கப் போவதில்லையெனவும் சூளுரைத்துள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.


சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட முன்பதாக மீண்டும் நீதித்துறை குறித்து விசனம் வெளியிட்ட ரஞ்சன், பிள்ளையானை விடுவித்தது போல் துமிந்த சில்வாவையும் அரசு விடுவிக்கும் எனவும் துமிந்தவை போதைப் பொருள் வியாபாரியென தெரிவித்தமைக்காகவே தான் சிறையிலடைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.


தனது ஊதியத்தை கூட மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் தனது நேர்மையான பயணத்தை முடக்க முடியாது எனவும் எந்த வகையிலும் மன்னிப்புக் கோரப் போவதில்லையெனவும் தெரிவித்த ரஞ்சன் அனைவரும் 'திருடர்கள்' எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment