மத நம்பிக்கைகளை விட 'விஞ்ஞானமே' முக்கியம்: அனில் - sonakar.com

Post Top Ad

Saturday, 2 January 2021

மத நம்பிக்கைகளை விட 'விஞ்ஞானமே' முக்கியம்: அனில்

 


மத நம்பிக்கைகள், புராண பழக்கவழக்கங்களை விட விஞ்ஞானத்துக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க.


கொரோனா தொற்றால் உயிரழப்போரின் உடலங்கள் குறித்த விஞ்ஞானத்தை முழுமையாக ஆராயாமல் முடிவெடுக்க முடியாது எனவும் மத நம்பிக்கைகள்  - புராண நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மார்ச் மாதமளவில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைவாக இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடலங்களை அடக்கவும் - எரிக்கவும் அனுமதித்துள்ளதாக அனில் ஜாசிங்கவே முதலில் அறிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது (சோனகர்.கொம்).

No comments:

Post a Comment