உட்கட்சி எதிரிகளிடமிருந்தே ஹரினை பாதுகாக்க வேண்டும்: நாமல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 January 2021

உட்கட்சி எதிரிகளிடமிருந்தே ஹரினை பாதுகாக்க வேண்டும்: நாமல்

 


சமகி ஜன பல வேகய பல்வேறு உட்கட்சி முரண்பாடுகளுக்கு முகங் கொடுத்து வருவதனால் அதனால் ஹரினுக்கு ஏதும் ஏற்பட்டு விடாமலிருக்க அவருக்கு உச்ச கட்ட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.


அவ்வாறு செய்யாவிடின், ஹரினுக்கு ஏதும் நடந்தால் ஜனாதிபதியின் பெயர் கெட்டு விடும் என நாமல்  விளக்கமளித்துள்ளார்.


தன்னைக் கொலை செய்ய முயன்ற பிரபாகரனை கொன்று நாயை இழுத்து வருவது போல் கொண்டு வந்ததாகவும் தனக்கு இன்னொரு முகம் இருப்பதாகவும் தெரிவித்து ஹரின் பெர்னான்டோவுக்கு ஜனாதிபதி எச்சரித்த நிலையில் தனக்கு உயிராபத்து ஏற்பட்டிருப்பதாக ஹரின் பொலிசில் முறையிட்டிருந்தார். இந்நிலையிலேயே நாமல் இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment