இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைகிறது: AI - sonakar.com

Post Top Ad

Thursday 28 January 2021

இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைகிறது: AI

 


இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து வருவதாக எச்சரித்துள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை.


யுத்த குற்றங்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மீதான அடக்குமுறை, அரச உயர் மட்டத்திலிருப்பவர்களின் இனவாதம், ஊடக சுதந்திரம், சுயாதீன சிவில் சமூக செயற்பாடுகளுக்கு  ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் என பல்வேறு விடயங்களை உள்ளடக்கியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையில் இந்நிலை தொடர்வதை சர்வதேச சமூகம் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.


இப்பின்னணியில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை உருவாக்க ஐக்கிய இராச்சியம் முன்னின்று உழைக்க வேண்டும் எனவும் அவ்வமைப்பு வேண்டிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment