மீகொட: தொழிற்சாலை ஊழியர்கள் 55 பேருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Friday, 15 January 2021

மீகொட: தொழிற்சாலை ஊழியர்கள் 55 பேருக்கு கொரோனா

 


மீகொட பகுதியில் இயங்கும் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் 55 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அங்கு பணி புரியும் 26 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் 7 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மேலும் பரிசோதனைகளை நடாத்தியதன் விளைவாக மேலதிகமாக 48 பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் தொற்றுக்குள்ளானவர்களோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்போரையும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹோமாகம மருத்துவ அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment