மாவனல்லையில் STF - இராணுவம் பாதுகாப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 December 2020

மாவனல்லையில் STF - இராணுவம் பாதுகாப்பு

 


மாவனல்லை, ஹிங்குல பகுதியில் கொழும்பு - கண்டி வீதியோரத்தில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை மீது நேற்றிரவு கல்வீச்சு நடாத்தப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில் அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


இராணுவத்தினரும் அங்கு அனுப்பப்பட்டுள்ள அதேவேளை புத்தர் சிலை நிறுவப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அளுத்நுவர பகுதியிலும் புத்தர் சிலையொன்றின் மீது கல்வீசி கண்ணாடி சேதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment