PCRக்கு பணமில்லை: விமான நிலையத்தில் சர்ச்சை! - sonakar.com

Post Top Ad

Friday 4 December 2020

PCRக்கு பணமில்லை: விமான நிலையத்தில் சர்ச்சை!

 


ஒமானிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுள் ஒரு குழுவினர், விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்குச் செலுத்துவதற்கு தம்மிடம் பணமில்லையென சர்ச்சையில் ஈடுபட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


54 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ள நிலையில் அதில் 20 பேர் வரை இவ்வாறு எதிர்க்குரல் எழுப்பியிருந்த நிலையில், ஈற்றில் அவர்களுக்கு இலவசமாகவே பரிசோதனைகளை நடாத்தி தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விமானத்தில் ஏற்ற முன்பதாகவே கட்டுநாயக்கவில் பணம் அறவிடப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment