ஜனாஸா எரிப்பை ஒரு போதும் ஏற்கவில்லை: ரிஸ்வி முப்தி! - sonakar.com

Post Top Ad

Friday 11 December 2020

ஜனாஸா எரிப்பை ஒரு போதும் ஏற்கவில்லை: ரிஸ்வி முப்தி!

 


கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடலங்களை கட்டாயமாக எரிக்கும் சுகாதார அமைச்சின் முடிவை ஆதரித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பத்வா ஒன்றை வெளியிட்டிருக்கலாமே என ஜனாதிபதி ஆணைக்குழுவில் தன்னிடம் வினவப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார் அ.இ.ஜ.உ தலைவர் ரிஸ்வி முப்தி.


இதற்குப் பதிலளித்த தாம், அடக்குவது ஒரு  கடமையாக இருந்தும் சஹ்ரான் என்ற பயங்கரவாதியின் ஜனாஸாவை சமூகம் பொறுப்பேற்க மறுத்தது. ஆயினும், கொரோனாவால் மரணிப்பவர்களால் வேறு பாதிப்பிருப்பதற்கான எவ்வித விஞ்ஞானபூர்வமான உறுதிப்படுத்தலும் இலலாத நிலையில் அவ்வாறு ஒரு விடயத்தை ஆதரிப்பதற்கான தேவையில்லையென பதிலளித்ததாகவும் குளிரூட்டிப் பாதுகாத்தாவது உடலங்களைக் கையளிக்குமாறும் தான் வேண்டிக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா உடலங்களை அடக்குவதொன்றே எமது நிலைப்பாடு எனவும் அதில் மாற்றமில்லையெனவும் தாம் ஆணைக்குழுவுக்கு விளக்கமளித்துள்ளதுடன் 20ம் திகதி வெளியிடவுள்ள ஆணைக்குழு அறிக்கையில் அதனையும் உள்ளடக்குமாறு வலியுறுத்தியதாகவும் ரிஸ்வி முப்தி தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment