இன - மத ரீதியில் 'சுகாதார' முடிவுகளை எடுக்க முடியாது: பிரதமர் - sonakar.com

Post Top Ad

Thursday 10 December 2020

இன - மத ரீதியில் 'சுகாதார' முடிவுகளை எடுக்க முடியாது: பிரதமர்

 



ஜனாஸா அடக்க விவகாரம் தொடர்பில் கடந்த சில தினங்களாக நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், இன்றைய தினம் சுகாதார அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


இந்நிலையில், இன - மத தேவைகளை முன்நிறுத்தி சுகாதார முடிவுகளை எடுக்க முடியாது என வலியுறுத்தியுள்ள அவர், நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாக உள்ள வறண்ட நிலப்பகுதியொன்றினை தேர்வு செய்து ஆராயுமாறு இதன் போது கருத்து தெரிவித்துள்ளார்.


எனினும், இறந்த உடலங்களில் 36 நாட்களுக்கு வைரஸ் வாழும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்திருந்த நிலையில், அனைத்தின மக்களும் தமது இன - மத தேவைகளுக்குமப்பால் சுகாதார விடயத்தில் ஒத்துழைக்க வேண்டும் எனவும், முஸ்லிம்களுக்கு இது தொடர்பில் விளக்கி ஒத்துழைப்பைப் பெறுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இச்சந்திப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளிடம் வேண்டிக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment