ஆயுர்வேத மருந்து விநியோகம்: பொலிஸ் விசாரணை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 December 2020

ஆயுர்வேத மருந்து விநியோகம்: பொலிஸ் விசாரணை!

 

நேற்றைய தினம் கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் கொரோனா ஆயுர்வேத மருந்து விநியோகம் என்று நிகழ்ந்த சம்பவம் மற்றும் பாரிய அளவில் மக்கள் ஒன்று கூடியமை தொடர்பில் விசாரித்து அறிக்கை தருமாறு கேகாலை எஸ்.எஸ்.பிக்கு உத்தரவிட்டுள்ளார் பொலிஸ் மா அதிபர்.


இவ்வாறு ஒரு மருந்துக்கு அனுமதி வழங்கவில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள அதேவேளை குறித்த நபர் தயாரித்த ஆயுர்வேத மருந்தை ஒரு மேலதிக உணவுப்பொருளாகக் கொள்ளலாம் என கருத்து வெளியிடப்பட்டிருந்தது.


எனினும் தனது மருந்தை அருந்தினால் கொரோனா வைரஸ் இல்லாமல் போய் விடும் என தயாரிப்பாளர் தெரிவித்திருந்ததோடு பாதுகாப்பு படையினரும் வரிசையில் நின்று அதனைப் பெற்றுக்கொண்டிருந்தனர். அத்துடன் சமய தலைவர்கள் கலந்து கொண்ட விசேட பூஜை நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment