ஆயுர்வேத 'கொரோனா' மருந்து: மக்கள் முண்டியடிப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 December 2020

ஆயுர்வேத 'கொரோனா' மருந்து: மக்கள் முண்டியடிப்பு!

 


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உடனடி நிவாரணம் தரக்கூடிய ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட மருந்து என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி விளம்பரப்படுத்தியிருந்த மருந்தைப் பெற மக்கள் சுகாதார வழிகாட்டல்களை மீறி முண்டியடித்துள்ளனர்.


கேகாலையில், குறித்த மருந்தைக் கண்டுபிடித்ததாக தெரிவிக்கும் தம்மிக பண்டாரவின் வீட்டை நோக்கியே இவ்வாறு மக்கள் படையெடுத்த நிலையில் சன நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிசார் தலையிட்டுள்ளனர்.


அண்மையில், கொரோனாவுக்காக பவித்ரா உட்பட்ட சில அமைச்சர்கள் விசேட பூஜை வழிபாடுகளை நடாத்தி, பூஜைப் பண்டங்களை ஆற்றில் வீசியதன் பின்னணியிலும் சர்ச்சைகள் உருவாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.


எனினும், இவ்வாறான ஒரு மருந்தால் எவ்வித பலனும் இருப்பதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரம் எதுவுமில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment