கைவிடப்பட்ட உடலங்களை எரிப்பது 'தற்காலிகமாக' இடை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Monday, 14 December 2020

கைவிடப்பட்ட உடலங்களை எரிப்பது 'தற்காலிகமாக' இடை நிறுத்தம்

 


கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாகக் கூறப்படும் உடலங்களுக்கு ஆகக்குறைந்தது 58,000 ரூபா பணம் அறவிடப்படும் கட்டாய நடைமுறை அறிமுகப்படுத்ததையடுத்து உறவினர்கள் உடலங்களைக் கைவிடும் நூதன போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.


பெரும்பாலும் முஸ்லிம்களே இவ்வாறு உடலங்களைக் கைவிட்டுச் சென்றுள்ள நிலையில் தற்சமயம் எரியூட்டல் 'தற்காலிகமாக' இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


தகனம் செய்யப்படும் இடம் கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான இடம் என்கிற அதேவேளை, அனர்த்த முகாமைத்துவ மையம் செலவுகளை பொறுப்பேற்பதாக தெரிவித்திருந்ததன் பின்னணியிலேயே கைவிடப்பட்டிருந்த 20 உடலங்களில் 11 அண்மையில் எரியூட்டப்பட்டிருந்தது. எனினும், தொடர்ந்தும் 9 உடலங்கள் எஞ்சியுள்ள நிலையில் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment