வரவு - செலவுத் திட்டம் நிறைவேறியதைக் கொண்டாட 'பார்ட்டி' - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 December 2020

வரவு - செலவுத் திட்டம் நிறைவேறியதைக் கொண்டாட 'பார்ட்டி'

 


வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாட அரசாங்கம் பட்ஜட் பார்ட்டி ஒன்றை எதிர்வரும் 10ம் திகதி ஏற்பாடு செய்துள்ளது.


சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போதைய சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக இவ்வாறான நிகழ்வுகளில் ஆகக்கூடியது 100 பேர் மாத்திரமே கலந்து கொள்ள அனுமதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment