முடிவெடுக்க முடியாமல் திணறும் முஸ்லிம் காங்கிரஸ்! - sonakar.com

Post Top Ad

Monday, 14 December 2020

முடிவெடுக்க முடியாமல் திணறும் முஸ்லிம் காங்கிரஸ்!

 


கட்சி முடிவையும் தலைமையையும் மீறி 20ம் திருத்தச் சட்டததுக்கு ஆதரவாக வாக்களித்த நான்கு உறுப்பினர்கள் தொடர்பில் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.


தாம் தலைமையின் அனுமதியுடனேயே அவ்வாறு வாக்களித்ததாக அந்த நால்வரும் விளக்கமளித்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் இது தொடர்பில் ஆராய கூட்டம் கூடியதாக தெரிவிக்கும் முஸ்லிம் காங்கிரஸ், சம்பந்தப்பட்ட நபர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கமைவாக எதிர்வரும் 30ம் திகதிக்குள் எழுத்து மூலம் விளக்கமளிக்க கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.


ஒக்டோபரில் இடம்பெற்ற 20ம் திருத்தச் சட்ட வாக்கெடுப்பு விவகாரத்துக்கு டிசம்பரிலும் நிலையான முடிவொன்றை அறிவிக்க முடியாமல் ரவுப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ் திணறுகின்ற அதேவேளை, தமது உறுப்பினர்கள் தொடர்பில் எதுவித நடவடிக்கை பற்றியும் ரிசாத் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் பேசவும் தயாரில்லையென்பதும், இரு கட்சிகளின் தலைவர்களது உடன்பாட்டுடனேயே நம்பிக்கை துரோகம் இடம்பெற்றதாக அரசியல் அவதானிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment