சபாநாயகர் உட்பட ஆளுங்கட்சியினருக்கு கொரோனா 'பானம்' - sonakar.com

Post Top Ad

Thursday, 10 December 2020

சபாநாயகர் உட்பட ஆளுங்கட்சியினருக்கு கொரோனா 'பானம்'

 


சபாநாயகர் உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு தனது ஆயுர்வேத கொரோனா மருந்தை வழங்கியுள்ளார் கேகாலை வைத்தியர் தம்மிக பண்டார.


குறித்த கலவைக்கு சட்டரீதியான அனுமதி வழங்கும் வரை மக்கள் பதற்றமடைய வேண்டாம் என ஏலவே கொரோனா அமைச்சர் அறிவுறுத்தியுள்ள நிலையில் இவ்வாறு அரசின் முக்கியஸ்தர்கள் அதனைப் பெற்று விளம்பரப்படுத்தியுள்ளனர்.


குறித்த பானத்தைப் பெறுவதற்கு அண்மையில் மக்கள் முண்டியடித்திருந்த நிலையில் அதன் விநியோகத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு பொலிஸ் விசாரணையும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment