மாவனல்லை விவகாரம்; கடும் நடவடிக்கை: நீதியமைச்சர் - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 December 2020

மாவனல்லை விவகாரம்; கடும் நடவடிக்கை: நீதியமைச்சர்


மாவனல்லையில் புத்தர் சிலைகள் மீது கல்வீச்சு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தீர விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கிறார் நீதியமைச்சர்.


இரு வருடங்களுக்கு முன்பாகவும் இவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் அதன் பின்னணியில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மீண்டும் அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பிரதேசத்தின் இனங்களுக்கிடையில் விரிசல்களை உருவாக்கும் திட்டமாக இருக்கலாம் என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.


பிராந்தியத்தில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் தேசிய பாதுகாப்புக்கே முக்கியத்துவம் எனவும் இது தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாகவும் நீதியமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment