உடலங்களை எரிக்கக் கோரி கடும்போக்கு வாதிகள் ஆர்ப்பாட்டம்! - sonakar.com

Post Top Ad

Monday, 28 December 2020

உடலங்களை எரிக்கக் கோரி கடும்போக்கு வாதிகள் ஆர்ப்பாட்டம்!

 


நாட்டில் தற்போது இருக்கும் சுற்று நிருபத்தினை மாற்றாது கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடலங்களை எரிப்பதைத் தொடருமாறு கோரி கடும்போக்குவாத பௌத்த துறவிகள் தலைமையிலான ஆர்ப்பாட்டம் மற்றும் நடைபவனி இன்று இடம்பெற்றுள்ளது.


தமது ஆதரவாளர்கள் சகிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன் குழுமிய நபர்கள் கட்டாய எரிப்பை வலியுறுத்தியதோடு ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமா? போன்ற கோசங்களை முன் வைத்திருந்தனர்.


இராவணா பலய, சிங்ஹல ராவய, சிங்ஹலே போன்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).

1 comment:

Post a Comment