கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்து தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்ல வந்த சுகாதார ஆய்வாளர்கள் மீது எச்சில் துப்பிய நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதிகாரிகளுடன் செல்ல மறுத்த நபர் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கிருந்து திரும்புவதற்கு முனைந்த அதிகாரிகள் இருவர் மீது துப்பியதாக இவர் மீது குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தது.
இப்பின்னணியில் கைதான நபருக்கு எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment